பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 等 அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

இன்-இளவேனில் 41. வருவேன் என்றார் வரவில்லையே!

அவரோ வாரார்; தான் வந்தன்றே - குயிற் பெடையின் குரல் அகவ, அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே - ஐங் 341 தலைவி, “பெட்டைக் குயில் தன் இனிய குரல் எடுத்துப் பாட அயிரின் நிறம் உடைய நுண்ணிய மணல் காற்றால் அசைந்து குவியும் பெரும்பொழுதான இளவேனில் வந்ததே அன்றி அப் பருவத்தே வருவேன் என்று குறித்துச் சென்ற நம் தலைவர் வாரார் ஆனார் எனவே, யான் எங்ங்னம் ஆற்றுவேன்” எனக் கூறினாள்.

42. வேனில் வந்ததும் காதலர் வரவில்லை! அவரோ வாரார்; தான் வந்தன்றே - சுரும்பு களித்துஆலும் இருஞ்சினைக் கருங் கால் நுணவம் கமழும் பொழுதே - ஐங் 342 தலைவி, “வண்டுகள் தேனையுண்டு ஒலிக்கும் பெரிய கிளைகளையும் கரிய அடியையும் உடைய துணாமரம் அதில் மலர்கள் மலர்ந்து மணம் கமழ்கின்றன. இவ் இயல்பு வாய்ந்த இன்னிளவேனிற்பருவமும் வந்தது. ஆனால் இப் பருவத்தில் வருவேன் என்று தெளியச் சொல்லிப் பிரிந்தவர் வரவில்லை” என்று வருந்திச் சொன்னாள்

i. 43. இளவேனிற்பருவத்தில் வரவில்லை! அவரோ வாரார்; தான் வந்தன்றே - திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே - ஐங் 343 தலைவி,"திண்மையான நிலையையுட்ைய கோங்க மரம் அரும்பிய அழகு மிகுந்த கொழுவிய அரும்பு கட்டு அவிழ்ந்து மலரும் இளவேனிற் பருவம் வந்ததே அல்லாது அப் பருவத் தில் மீண்டு வருவேன் என்று கூறிச் சென்ற காதலர் வர வில்லையே” என்று கூறி மனம் இரங்கினாள்.