பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை -வகை - உரை : த. கோவேந்தன் : 29

மும் வந்தது. அப் பருவத்தில் வருவேன் என உறுதி கூறித் தெளிவித்துச் சென்ற தலைவர் வரவில்லையே” என்று வருந்திச் சொன்னாள்

6aᎫ 2. 6y

51. வாடும் நிலை ஒழிக! அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், அருஞ் சுரஞ் செல்வோர், அருந்தினர் கழியும் காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க,இனிப்பல் இதழ் உண்கண் மடந்தை நின் நல் எழில் அல்குல் வாடிய நிலையே. - ஐங் 351 தலைவியை நோக்கி தோழி, "வழியில் நின்ற பலாவின் வெயிலால் வெதுப்பப்பட்ட சிறிய காயைச் செல்வதற்கு அரிய பாலை வழியில் செல்பவர் உண்டு நீங்குவர். அத்தகைய காடுகள் பிற்படும்படி நம் தலைவர் வந்தார். ஆதலால் பல இதழ்களை உடைய மலர் போலும் மையுண்ட கண்ணை யுடைய மடந்தையே நீ இப்போது நின் நல்ல அழகு நாளும் வாடி வருந்தி நின்ற நிலையை இனி விடுக” என்று உரைத்தாள்.

52. வந்தார் விரைந்து

விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பினர்ப் பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும் வெஞ் சுரம் அரிய என்னார் வந்தனர் - தோழி! - நம் காதலோரே! - ஐங் 352 “சிறந்த அம்பு தொடுக்கும் வீரர் தம் வில்லிடைத் தொடுத்துவிட, எதிர் நின்று உயிர் தந்து வீழ்ந்த வீரர் பொருட்டு நடப்பட்ட பெயரும் பீடும் எழுதப்பட்ட நடு கல்லைப் போன்ற சிறந்த சருச்சரை பொருந்திய பெருங்கை யுடைய யானை, பெரிய சினம் மிக்குத் திரியும் கொடிய காடுகள் செல்வதற்கு அரியவை என்று நினைத்துத் தாழ்க்கா மல் வந்தார் விரைவாக நம் தலைவர்' என்று தோழி தலைவியை நோக்கிக் கூறினாள்