பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தலைவன், பிரிந்தான்; அவன் வஞ்சினக் காளை போன்றவன். அங்ங்னமாக யான் வருந்துவதற்கு இடமான இப் பழைய ஊரார் அலர் கூற அதை எண்ணியும் பாராமல் என் மகள் தான் சென்ற வழியில் என்னையும் நினைந்தாளோ? அறியேன்!” என்று கூறினாள்

73. தலைவனும் தாயும் தவித்திடு

நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக -

புலிக் கோட் பிழைத்த கவைக் கோட்டு முது கலை

மான்பிணை அணிதர, ஆண் குரல் விளிக்கும்

வெஞ் சுரம் என் மகள் உய்த்த

அம்பு அமைவல் வில் விடலை தாயே! - ஐங் 373

நற்றாய், “புலியால் பற்றப்படுவதினின்று தப்பிப் பிழைத்த கவடுபடு கொம்பையுடைய முதிய கலைமான், தன் பெண் மான் தன்னை அடையுமாறு தன் ஆண் குரலை உயர்த்தி விரும்பி அழைக்கின்ற கொடிய காட்டில் என் மகள் செல்லும்படி செய்த புதிய மூங்கிலால் செய்யப்பட்ட வலிய வில் ஏந்திய தலைவனின் தாயானவள் நினைக்குந் தோறும் என்னைவிட பெரும் கண்ணிர் வடியும் துன்பத்தை அடை வாளாக” என்றாள்.

74. காதலின் துணிவு

பல் ஊழ் நினைப்பினும், நல்லென்று ஊழ -

மீளி முன்பின் காளை காப்ப,

முடி அகம் புகாஅக் கூந்தலள்

கடுவனும் அறியாக் காடு இறந்தோளே. - ஐங் 374

“பல முறை ஆராய்ந்தாலும் இந்த உடன் போக்கு நல்ல முறையே ஆகும் என எண்ணி, வீரனைப் போன்ற வலி யுடைய காளையைப் போன்றவன் காவல் செய்ய, முடித்தற் குரிய நீளம் இல்லாத கூந்தலையுடையவளான என் மகள், குரங்குகளாலும் புகுந்தறியப் படாத காட்டைக் கடந்து போயினள்; அவள் அறிவு இருந்தவாறு என்னே!” எனத் தாய் அவள் இளமை நினைந்து உரைத்தாள்