பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 39

75. நினையாமல் நீங்கினாளே!

'இது என் பாவைக்கு இனியநன் பாவை, இது என் பைங்கிளி எடுத்த பைங்கிளி; இது என் பூவைக்கு இனிய சொற் பூவை என்று அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் காண்தொறும் காண்தொறும் கலங்க, நீங்கினளோ - என் பூங்கனோளே? - ஜங் 375 “இந்தப் பாவை, என்னுடைய பாவை போன்ற மகள் வைத்து விளையாடிய பாவையாகும் இந்தக் கிளி சுழன்ற பார்வையையுடைய அழகுமிக்க ஒளி பொருந்திய நெற்றியை உடைய பசிய கிளி போன்றவள் வளர்த்த பச்சைக் கிளி இப்படிக் கூறி, யான் இவற்றைக் காணுந்தோறும் கலங்கி வருந்த, என் அழகிய கண்களையுடைய மகள் பிரிந்து போயினள் போலும்” என்று தாய் பிரிந்த மகளை எண்ணி வருந்தி உரைத்தாள்

76. தீவினை தீயிடை எரிந்தழிக நாள் தொறும் கலிழும் என்னினும் இடை நின்று காடு படு தீயின் கனலியர் மாதோ - நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப், பூப் புரை உண்கண் மடவரற் போக்கிய புணர்த்த அறன் இல் பாலே! - ஜங் 376 நற்றாய், “நல்ல செயல்வினை அமைந்த நெடிய இல்லத் தில் உள்ள நம்மவர் ஒ என்று கலங்கி வருந்த, மலரைப் போல் மை தீட்டப்பட்ட கண்களையுடைய மடமகள் யான நினைந்து வருந்தும்படி காட்டிடை நின்று அதில் தோன்றிய தீயில் பட்டு எரிந்து அழிவதாகுக!” என்று விதியை நொந்து உரைத்தாள்.

77. விளையாட்டுப் பொருள்கள் வருத்துகின்றன நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்