பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

சென்றனள்மன்ற, என் மகளே - பந்தும் பாவையும் கழங்கு எமக்கு ஒழித்தே. - ஜங் 377 மகளைப் பிரிந்த நற்றாய், “நீர் வேட்கை மிக்கு வருந்தும் யானை வங்கியம் என்னும் இசைக் கருவியின் துரம்பு போல் துதிக்கையை உயர்த்திப் பிளிறும் வழி. அவ் வழியில் என் மகள் பந்தும் பாவையும் கழங்கும் முதலிய பல விளை யாட்டுப் பொருள்களையும் யான் கண்டு வருந்தும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டாளே” என்று வருந்தி உரைத்தாள். 78. தோழிக்காக வருந்துகிறேன்! செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலை, யாம் புலம்பப் போகிய அவட்கோ நோவன்; தே மொழித் துணை இலள் கலிழும் நெஞ்சின் இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுவே. - ஐங் 378 நற்றாய், “செல்வதற்குப் பரப்பிய சிறகுகளையுடைய வெளவால் விரும்பிப் பறக்கும் பின் மாலைக் காலத்தில், யாம் துன்பம் அடையும்படி எம்மைப் பிரிந்து சென்ற மகளை நினைந்து நான் அழவில்லை. இனிய சொற்களை யுடைய துணைவி இன்றி வருந்தும் நெஞ்சுடன் தோழியான இவள் பொருட்டாகவே யான் வருந்துகின்றேன்” என்று சொன்னாள்

79. பெற்றோர் அறியாமல் செல்லல் இனிதோ?

தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் இனிது ஆம்கொல்லோ தனக்கே - பனி வரை இனக் களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே? - ஐங் 379 நற்றாய், “குளிர்ந்த மலையில் யானைகள் கூட்டமாக இயங்கும் சோலைகளின் வழியே விளக்கம் மிக்க வெற்றி பொருந்திய வேலை உடையவனுடன் கூடிச் செல்லல். தன்னால் விருப்பப்பட்ட ஆய மகளிர் சூழாம் செய்யும் நன் மணத்தைப் பெறக்கூடிய இன்ப நுகர்ச்சியைவிட இனியதாய் இருக்குமோ” என்று நெஞ்சு வருந்திக் கூறினாள்