பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 43

'யாய் நயந்து எடுத்த ஆய்நலங்கவின ஆர் இடை இறந்தனள் என்மின் - நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே. - ஜங் 384 தலைவி, தன் எதிரே வரும் அந்தணரை நோக்கி, “தொலை வில் உள்ள நிலத்தை எண்ணித் தளர்ந்த நடையை உடையவ ராகச் செல்லும் அந்தணரே! உங்களை ஒன்று இரந்து சொல்கின்றேன். நீவிர் எம் ஊர்க்குச் செல்லின், நேரிய இறை பொருந்திய முன் கையையுடைய என் தோழியர்க்கு உங்கள் தோழியானவள் தன் தாய் போற்றி வளர்த்த அழகிய நலம் வனப்பு மிக, செல்வதற்கரிய வழிகளைக் கடந்து போனாள்" எனக் கூறுவீராக!” எனக் கூறினாள்

85. காதலனுடன் சென்றதைக் கழறு

கடுங்கட் காளையொடு நெடுந் தேர் ஏறிக், கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய, வேறு பல் அருஞ் சுரம் இறந்தனள் அவள் எனக் கூறுமின் - வாழியோ ஆறு செல் மாக்கள்! நல் தோள் நயந்து பாராட்டி, எற் கெடுத்து இருந்த அறன்இல் யாய்க்கே - ஜங் 385 “வழியில் செல்பவர்களே! என்னுடைய நல்ல தோள் களை விரும்பிப் பாராட்டி வளர்த்து, யான் தலைவனுடன் கூடி என் கவினை அழகுபடுத்திக் கொள்ளாத வகையில் இற் செறித்து வைத்த அறிவு இயல்பில்லாத என் தாயைக் காணின், அவளுக்கு அஞ்சாமையுடைய தன் காதலனுடன் நெடிய தேர் மீது ஏறிக், கொலையில் வல்ல வேங்கைகள் மிக்க மலைகள் பிற்பட் முன்னாக உள்ள பலவாய் வேறு பட்ட போவதற்கரிய சுரங்களைக் கடந்து நின் மகள் சென்றாள் எனக் சொல்வீராக!” என்று பரிந்து கூறினாள் தலைவி

86. காதலனுடன் சென்றனள் கன்னி!

புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே -