பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நெடுஞ் சுவர் நல் இல் மருண்ட

இடும்பை உறுவி நின் கடுஞ் சூல் மகளே. - ஐங் 386

தலைவியைக் கண்டவர் அவளுடையதாயிடம், "நெடிய சுவர் சூழ்ந்த நல்ல இல்லத்தில் மயங்கி ஒடுங்குதற்கான துன்பத்தை அடைபவளே, நின் முதற் சூலில் தோன்றிய மகளாகிய தலைமகள் தன்னை விரும்பிய காதலனுடன் சேர்ந்து சிறு கண்களையுடைய யானைகளும் புலிகளும் திரியும் வழிகளைக் கடந்து சென்றாள். ஆதலால் நீ வருந்தாதே' என்று உரைத்தனர்

87. துன்புறேல் துணையுடன் சென்றாள்!

'அறம் புரி அரு மறை நவின்ற நாவின் திறம் புரி கொள்கை அந்தணிர் தொழுவல் என்று ஒண்டொடி வினவும் பேதைஅம் பெண்டே! கண்டனெம் அம்ம, சுரத்திடை அவளை - இன் துணை இனிது பாராட்டக், குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே. - ஐங் 387 “அறத்தை உரைக்கும் அரிய மறைகளை ஒதிப் பயின்ற நாவையும், அது விதிக்கும் செயல்வகை அறிந்து ஆற்றும் ஒழுக்கத்தையும் கொண்ட அந்தணரே, வணங்குகின்றேன் என்று கூறி, ஒளியுடைய தொடி அணிந்த என் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். அவளை நீங்கள் பார்த்த துண்டா? என்று வினவும் பேதைமையுடைய மனைகெழு மாதே! யாம் அவளைச் வழியிடையே பார்த்தோம் இன்னும் கேள்: இனிய துணைவனான காதலன் மகிழ்ந்து நலம் பாராட்டி வரக் குன்றுகள் செறிந்த உயர்ந்த மலை களைக் கடந்து சென்று விட்டாள். ஆதலால் நீ அவளைப் பின் தொடர்ந்து போய்த் தேடித் துன்புற வேண்டா!” என்று செவிலிக்கு அந்தணர் ஆறுதல் உரைத்தனர்.

88. பாலை வழியில் பார்த்தோர் மொழி நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் கருங் கால் யாத்து வரி நிழல் இரீஇச்,