பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 49

உடைய பன்றியைக் கொள்ளாமல் நீங்கும் வழியைக் கடந்து அண்மையில் வருகின்றனள் என இனிய நகை பொருந்திய முறுவலைப் பெற்ற என் ஆயத்தார்க்கு முன்னே விரைவாய்ப் போகும் நீவிர் கூறுவீராக!” என்று தன் ஊர்க்குச் செல்ப வர்க்குக் கூறினாள்.

98. ஊரவர் புலம்பினர்! புள்ளும் அறியாப்பல் பழம் பழுணி, மட மான் அறியாத் தட நீர் நிலைஇ, கரம் நனி இனிய ஆகுக' என்று நினைத்தொறும் கலிழும் என்னினும் மிகப் பெரிது புலம்பின்று - தோழி, நம் ஊரே - ஜங் 398 "தோழியே! நின்னை எண்ணுந்தோறும் நீ செல்லும் சுரம் பறவையினமும் தேர்ந்து அறியாத பல வகைப்பட்ட பழங்கள் நிரம்பி, மடப்பம் பொருந்திய மான் கூட்டமும் பார்த்து அறியாத பெரிய நீர் நிலைகள் நிலைபெறப் பெற்றுச் செல்வதற்கு இனியவாய் விளங்குக என்று வாழ்த்திக் கண்ணிர் விட்டுக் கலங்கும் என்னை விட நம் ஊரில் உள்ளவர் மிக்க இரக்கம் கொண்டு புலம்பி நின்றனர்” என்று தோழி தலைவியை நோக்கிச் சொன்னாள்.

99. என் மனையில் திருமணம்:

'நும் மனைச் சிலம்பு கழிஇய அயனினும், எம் மனை வதுவை நல்மணங் கழி'எனச் சொல்லின் எவனோ மற்றே - வென்வேல், மை அற விளங்கிய கழலடிப், பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே? - ஐங் 399 “வெற்றி மிக்க வேலையும் குற்றம் இல்லாத விளங்கிய கழல் அணிந்த காலையும் உடைய பொய்ம் மொழிவதில் வல்ல தலைவனை ஈன்ற தாய்க்கு நும் வீட்டில் சிலம்பு களைந்து திருமணமான கடமையைச் செய்வாயாக! என நீவிர் அவளுக்கு உரைத்தால் வரக்கூடிய இழுக்கு யாது?” என்றாள் ஆங்கு வந்தவர்க்கு நற்றாய்.