பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காட்சி ஊரன் கொடுமை காந்தனள் ஆகலின் நாணிய வருமே.

- ஒரம்போகியார் குறு 10 “செல்வச் செழிப்பும் இல்லற இன்பமும் ஆகிய விழை வினைத் தந்து தலைவன் மகிழ்ந்து குலாவுவதற்குரிய எம் தலைவி பயிற்றங்காய் போன்ற பூங் கொத்துகளிலுள்ள பசிய பூந்தாது தம்மேல் படியும்படி உழவர்கள் வளைந்த, மணக் கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளையுடைய காஞ்சி மரத்தை உடைய ஊரனாகிய தலைவனது கொடுமையை நாம் தெரிந்து கொள்ளாதபடி மறைக்கின்றாள். ஆதலால், நீ வருகின்ற பொழுது, நீ நாணும்படி உம்மை எதிர்கொண்டு அழைப்பாள்” என்று தலைவனுக்குத் தோழி கூறினாள்.

103. நெஞ்சே நினைந்திருப்போம்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாள்தொறும் பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி, ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே எழு, இனி வாழி, என் நெஞ்சே! முனாது, குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல்வேற் கட்டி நல் நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

- மாமூலனார் குறு 11 “எனது நெஞ்சமே, நீ வாழ்வாயாக் சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கை வளை உடல் மெலிவினால் நெகிழ்கிறது. நாள்தோறும் இமை பொருந்துதல் இல்லாமை யினால் உறக்கமின்றிக் கலங்கி அழும் கண்ணோடு தனித் திருந்து இவ் இடத்தில் வருந்துதல் இனி ஆற்றமாட்டேன். கஞ்சங் குல்லையாகிய கண்ணியை அணிந்த வடுகருக்குரிய இடத்திற்கு முன்னேயுள்ளதாகிய பலவாகிய வேற்படையை யுடைய கட்டி என்பவனது நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் தலைவர் உள்ளாரேனும் அவரிடத்தும் செல்லுதலை யான் எண்ணியுள்ளேன். நீயும்