பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 53

இப்பொழுதே எழுவாயாக’ என்று தலைவி தன் நெஞ்சிற்குக் கூறியது போல் தோழிக்குக் கூறினாள்.

104. இடித்துரைக்கும் ஊர் எறும்பி அளையின் குறும் பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறி, கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே, அது மற்று அவலம் கொள்ளாது, நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.

- ஒதலாந்தையார் குறு 12 “தலைவர் சென்ற வழியானது, எறும்பின் வளையைப் போல குறுகிய பலவாகிய நீர்ச்சுனைகளை உடையது; கொல்லனது உலைக்களத்து உள்ள பட்டறைக் கல்லைப் போன்ற வெம்மையுடைய பாறையின் மேல் ஏறிச் செல்லுதல் வேண்டிய அருமைத்து வளைந்த வில்லை உடைய எயினர் வழிப்போக்கர் பொருளைக் கவரும் இடமாகிய பிளவுபட்ட வழிகளையுடையது என்று கண்டோர் கூறுவர். இந்த ஆர வாரத்தை உடைய ஊரானது அவ் வழியின் கொடுமையைப் பற்றி எண்ணாது, வேறுபட்ட சொற்களைக் கூறி என்னை இடித்துரைக்கும்” என்று ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தாள்.

105. நட்பு உண்மையானது

பறை படப், பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு தொல் முதாலத்துப் பொதியில் தோன்றிய நால் ஊர்க் கோசர் நல்மெர்ழி போல, வாய் ஆகின்றே - தோழி, - ஆய் கழல் சேயிலை வெள் வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

- ஒளவையார் குறு 15 "தோழி! அழகிய வீரக்கழலையும், செம்மையாகிய இலை வடிவில் ஆய வெள்ளிய வேலையும் கொண்ட தலைவனோடு பலவாகத் தொகுக்கப் பட்ட வளைகளைப்