பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ? அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

பூண்ட முன்கையை யுடைய நின் மகள் செய்த நட்பானது, மிகப் பழைய ஆல மரத்தடியின் கண்ணே உள்ள ஊர்ப் பொது இடத்தில் தங்குதலையுடைய நான்கு ஊரிலுள்ள கோசரது நன்மையையுடைய நீடு மொழி உண்மையாவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும் செய்தலால் உண்மை ஆகியது” என்று செவிலித்தாய் உரைத்தாள்

106. உள்ளார் கொல்லோ?

உள்ளார்கொல்லோ - தோழி! கள்வர்

பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்,

செங்காற் பல்லி தன் துணை பயிரும்

அம் காற் கள்ளிஅம் காடு இறந்தாரே?

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 16

"தோழி! ஆறலைக் கள்வர், இரும்பினாற் செய்யப்பட்ட தம் அம்பின் செம்மை காணும் பொருட்டு அதை தம் நக நுனியில் புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செம்மையாகிய கால்களையுடைய பெண் பல்லியை அழைத் தற்கு இடமாகிய கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து பொருள் வயின் சென்ற தலைவர் நம்மை நினையாரோ?” என்று தோழி வினவினாள்

107. யாம் அறிவற்றவர் ஆகுக!

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து,

பொருள்வயிற் பிரிவோர் உாவோர் ஆயின்,

உரவோர் உரவோர் ஆக!

மடவம் ஆக, மடந்தை, நாமே!

- கோப்பெருஞ்சோழ குறு 20

"தோழியே! அருளையும் அன்பையும் துறந்து, தன் துணைவியையும் விட்டுப் பிரிந்து பொருள் தேடும் முயற்சி யின் பொருட்டுப் பிரியும் தலைவன் அறிவுடையவ ராயின், அவ் ஆற்றலையுடையார் அறிவுடையவரே ஆகுக! அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றலில்லாத யாம் அறிவிலேம் ஆகுக! எனத் தலைவி தோழியிடம் இயம்பினாள்