பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

'ஆஅ ஒல் எனக் கூவுவேன்கொல்? - அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.

- ஒளவையார் குறு 28 “சுழன்று அசைந்து அசைந்து வருகின்ற தென்றற் காற்று வருத்த, எனது வருத்துகின்ற காம நோயாகிய துன்பத்தை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரிலுள் ளாருக்காக யான் சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள் வேனோ? கொல் முதலிய கருவிகளால் தாக்கிக் கொள் வேனோ? ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆஒ என்றும் ஐயோ என்றும் ஒலியுண்டாக உரத்துக் கூப்பிடுவேனோ? இன்னது செய்வேன் என்பதை அறியேன்” என்று தலைவி ஆற்றாமையால் அலறினாள்.

11. கனவு தந்த மயக்கம் கேட்டிசின் வாழி - தோழி அல்கல், பொய்வலாளன் மெய் உறல் மரீஇய வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே, குவளை வண்டு படு மலரின் சாஅய்த் தமியென்; மன்ற அளியென் யானே.

- கச்சிப்பேட்டு நன்னாகையார் குறு 30 "தோழி கேட்பாயாக, இராப் பொழிதிலே, பொய் கூறுதலில், வன்மையுடைய தலைவன் என் உடம்போடு இணைதனில்ப் பொருந்தியது, மெய்போலும் தன்மையுடைய பொய்யாகிய கனவாகும். அது, மயக்கத்தை உண்டாக்க துயிலுணர்ந்து எழுந்து, தலைவன் என்று எண்ணிப் படுக்கை யைத் தடவினேன். வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலர்போல மெலிந்து தவித்தவளாயுள்ளேன், அத்தகைய யான் இரங்குதற்குரியள்” என்று தலைவி வருந்தினாள்.

112. களிற்றின் செயலால் வருவார்!

நசை பெரிது உடையார்; நல்கலும் நல்குவர்; பிடி பசி களைஇய பெருங்கை வேழம்