பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை வகை - உரை : த. கோவேந்தன் : 57

மென் சினை யாஅம் பொளிக்கும் அன்பின - தோழி! - அவர் சென்ற ஆறே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 37 "தோழியே தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையார்; தலையளி செய்தலும் உடையவர்; அவர் செல்லும் வழிகளில் பெண்யானையின் பசியை நீக்கும் பொருட்டுப் பெரிய துதிக்கையை உடைய ஆண்யானை மெல்லிய கிளைகளை உடைய 'யா மரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப் பெண் யானையைப் பருகச் செய்யும் அன்பு நிலைக் காட்சியைக் கண்டவிடத்து, நமக்கு அருளுதலை எண்ணி விரைந்து வருவார்.

13. அவர் சென்ற வழி! வெந் திறல் கடுவளி பொங்கர்ப் போந்தென, நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலையுடை, அருஞ்சுரம் என்ப நம் முலையிடை முனிநர் சென்ற ஆறே. - ஒளவையார் குறு 39 "தோழி! நம் முலையிடத்தே துயிலுகின்றதை வெறுத்துப் பிரிந்து சென்ற தலைவர் செல்லும் வழியானது வெம்மை யோடு கூடிய வலிய பெருங்காற்றானது மரக்கிளைகளினுடே வீசுவதால், வாகை மரத்தினது நெற்றாய் விளைந்த வற்ற லானது ஒலித்தற்கு இடமாகிய மலைகளை உடைய கடத்தற் கரிய கொடிய பாலை வழியாகும்” என்று தலைவி கூறினாள்

14. விழாக் கொண்ட பேரூர்!

காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற, அத்தம் நண்ணிய அம் குடிச் சீறுர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றிற் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென் - தோழி - அவர் அகன்ற ஞான்றே.

- அணிலாடு முன்றிலார் குறுந் 41 "தோழி! தலைவர் அருகில் இருப்ப மிக மகிழ்ச்சியுற்று, விழாக்கொண்ட ஊரினர் மகிழ்வது போல யானும் மகிழ்