பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வேன் அவன் என்னைப் பிரிந்த காலத்தில் பாலை நிலத்தில் உள்ள அழகிய குடியை உடைய சிறிய ஊரில் மாந்தர் நீங்கிச் சென்ற வீட்டின் அணிலாடுகின்ற முற்றத்தைப் போலப் பொலிவிழந்து வருந்துவேன்” என்றாள் தலைவி தோழியிடம்

115. இரு பேராண்மை பூசல் செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே, 'ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே, ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல், நல்அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. - ஒளவையார் குறு 43

"தோழி! தலைவர் நம்மைப் பிரிந்து செல்வார் என்று எண்ணி யான் அவர் செலவை விலக்காமல் சோர்ந்திருந் தேன், அவரும் நம் பிரிவைத் தெரிவித்தால் அதற்கு இவள் உடன் படமாட்டாள் என்று எண்ணி என்னிடம் கூறாதிருந் தார், அந்தக் காலத்தில் இருவரிடத்தும் தோன்றிய இருவகை ஆண்மைகளால் விளைந்த மாறுபாட்டினால் என் துன்ப முடைய நெஞ்சு, நல்ல பாம்பு கடித்ததினால் வருந்துவதைப் போல இப்போது மிக்க கலக்கத்தை அடைந்துள்ளது” என்று வருந்தியபடி தலைவி கூறினாள்

16. விண் மீனினும் பலர்

காலே பரி தப்பினவே, கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;

அகல் இரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

- வ்ெஸ்ளிவீதியார் குறு 44

“என் கால்கள் நடந்து நடந்து வருந்துகின்றன; என் கண்கள் எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து ஒளியை இழந்தன உறுதியாக இந்த உலகத்தில் என் மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர், அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்” என்று செவிலித்தாய் வருந்திக் கூறினாள்