பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 59

117. தலைவர் வருத்தம் தீராரோ?

"தாதின் செய்த தண் பனிப்பாவை காலை வருந்தும் கையாறு ஒம்பு என, ஓரை ஆயம் கூறக் கேட்டும், இன்ன பண்பின் இனை பெரிது உவக்கும் நன்னுதல் பசலை நீங்க, அன்ன நசை ஆகு பண்பின் ஒரு சொல் இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே?

- பூங்கணுத்திரையார் குறு 48 “பூந்தாது முதலியவற்றால் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சி யுடைய விளையாட்டுப் பான்வயானது தலைவி தன்னைப் போற்றுத்லை ஒழித்தாளென வருந்துகிறது. அதனைப் பாது காப்பாயாக என்று தோழியர்க் கூட்டம் சொல்லக் கேட்ட பின்பும் வாளாது வருந்தும் நல்ல நெற்றியினையுடைய தலைவியின் பசலை நீங்கும்படி, விருப்பமுடைய ஒரு சொல் கூறுதல் தலைவனுக்கு இயலாதோ?” என்று தோழி கூறினாள்

18. அவள் வந்திருந்தால் இரங்கத்தக்கது: வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சில் நீர் வளையுடைக் கையள், எம்மோடு உணி இயர், வருகதில் அம்ம, தானே; அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே.

- சிற்ைக்குடி ஆந்தையார் குறு 56 “வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய, காட்டுமல்லிகைப் பூ முடிய அழுகல் நாற்றத்தையுடைய சிறிதான நீரை, வளையையுடைய கையளாய், எம்மொடு சேர்ந்து உண்ணுதற்குத் தலைவி வருக வந்தால் எம் நெஞ்சின்கண் விரும்பி உறையும் அத் தலைவி மிகவும் இாங்கத்தக்கவள்” என்றான் தலைவன்.

119. வரும்வரை பொறுத்தல் வேண்டும்!

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு கனைக்