பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

குவளையொடு பொதிந்த குளவி நாறு நறுநுதல் தவ்வென மறப்பரோ - மற்றே முயலவும், சுரம் பல விலங்கிய அரும் பொருள் நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.

- மோசிகீரனார் குறு 59 “ஒரு கண்ணுடைய கிணைப் பறையை முழக்கி முடிக்கும் தாளத்தினை உடைய பாணர் முதலிய பரிசிலரைப் பாது காக்கும் அதலை என்ற குன்றத்தில் உள்ள அகன்ற வாயை உடைய ஆழமுள்ள சுனையிடத்து மலர்ந்த குவளை மலர்க ளோடு சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகையின் மணங் கமழும் நின் நெற்றியைத் தலைவர் மறந்து விடுவாரோ? எவ்வளவு முயன்றாலும் பாலை நிலம் கடந்து சென்று கிடைத்தற்கரிய பொருள் பெற்று மீண்டு வருவோமென்று கருதிச் சென்ற தல்ைவர் காமம் நீட்டித்துத் தங்குதல் இயலாது.ஆதலின் நீ வருந்துவதை நீக்குவாயாக!” என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள்

120. நெஞ்சே நீ சொல்லுக 'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் செய் வினை கைம்மிக எண்ணுதி, அவ் வினைக்கு அம்மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின் - நெஞ்சே.

- உகாய்க்குடிகிழார் குறு 63 "நெஞ்சே! இரவலருக்குக் கொடுத்தலும், இன்பங் களை நுகர்வித்தலும் பொருளில்லாத வறியவர்களுக்கு இல்லை என்று கருதி, பொருள் செய்தற்குரிய செயல்களை மிகவும் எண்ணிச் செய்கின்றார். அச் செயல் செய்வதற்குத் துணையாக அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ! எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லு வாய்ாக" என்று தலைவன் தன் நெஞ்சிடம் வினவினான்.

121. நம்மை நினைக்கவும் மாட்டாரோ?

உள்ளார்கொல்லோ - தோழி - கிள்ளை வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்