பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

"தோழி! உனக்கு யான் ஒன்று கூறுவேன் கேட்டாயாக! வெம்மை மிகுந்த கடப்பதற்கரிய பாலை நில வழியிலே இறந்துபட்ட வழிப்போக்கர்களுடையே உடல்களை மறைந்த தழைக் குவியலானது உயர்ந்த நல்ல யானைக்குச் செயற்கை யாய் இட்ட நிழலைத் தருவதற்குரிய பாலை நிலவழியில் என்னைப் பிரிந்து சென்ற தலைவருக்காக மெலிந்தன வாகிய பரந்த மெல்லிய என் தோள்கள் தவறுடையன என்று கூறின் அவை சிறிதும் தவறு இல்லாதனவாம்” என்றாள் தலைவி

124. அவர் அங்கேயே தங்கிவிடுவாரோ?

கான யானை தோல் நயந்து உண்ட பொரிதாள் ஒமை வளி பொரு நெடுஞ் சினை அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் புலம்பு தரு குரல் புறவுப் பெடை பயிரும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறுார்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே - யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் சொல்லாது ஏகல் வல்லுவோரே.

- குடவாயிற் கீரத்தன் குறு 79 "தோழி! யான் பிரிவதற்கு ஒத்துக் கொள்ளேன் என்று சொன்ன தவற்றினால் நம்மிடம் சொல்லாமற் சென்று விட்ட வன்மையுடைய தலைவர், காட்டு யானையால் பட்டையை விரும்பி உண்ணப்பட்ட பொரிந்த அடிப் உடைய ஒமை மரத்தின் காற்றடிக்கும் நெடிய கிளையினது அசைதலை உடைய வற்றல் கொம்பில் ஏறி, "ஒய் என்று, தனிம்ை வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண் புறா பெட்டைப் புறாவை, அழைக்கும் பாலை நிலத்தின் வழியே உள்ள அழகிய குடிகளை உடைய சிற்றுாரில் தங்கி விட்டாரே? எனத் தோழியை நோக்கித் தலைவி வினவினாள்.

125 பாலை நில்த்தில் எப்படி நடப்பான் பெயர்த்தனென் முயங்க, யான் வியர்த்தனென் என்றனள், இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே -