பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,

ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்

யாங்கு அறிந்தன்று - இவ் அழுங்கல் ஊரே?

- அள்ளுர் நன்முல்லையார் குறு 140

தலைவர், கருக்கரிவாளைப் போன்ற முதுகை உடைய முதிய ஆண் ஓந்தியானது, வழிச் செல்லும் மனிதர்கள் அறி குறியாகக் கொள்ளும்படி தங்குகின்ற பாலை நிலத்தில் சென்றனர் அவர் பிரிந்த பிறகு அங்கே வலிமை அழிந்த யான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை, இரங்குதலைடைய இவ் ஊர் எவ்வாறு அறிந்தது” என்று தோழியைப் பார்த்து தலைவி வினவினாள்.

133. தன் மெல்லடி வருந்தப் போயினளே!

கழிய காவி குற்றும், கடல வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, இவ் வழிப் படுதலும் ஒல்லாள் - அவ் வழிப் பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ - செல் மழை தவழும் சென்னி விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!

- மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் குறு 144 “கழனியிடத்து மலர்ந்த காவி மலர்களைப் பறித்தும், கடலில் உள்ள வெள்ளிய தலையை உடைய அலையிடத்து விளையாடியும், தன்னோடு என்றும் பிரிதல் இல்லாத நல்ல ஆயத்தார் தம் தமக்குரிய விளையாட்டில் ஈடுபட்டிருக்க, அவள் அதில் ஈடுபாடு கொள்ளாளாகி, விரைந்து செல்லும் முகில்கள் தவழுகின்ற உச்சியை உடைய உயர்ந்த மலை களைக் கொண்ட அந்த வெம்மை மிகுந்த பாலை வழியின் பருக்கைக் கற்கள் அடியின் அழகைச் சிதைக்க அவனோடு போயினள்” என்று செவிலித்தாய் சொல்லி வருந்தினாள்.

134. காதலர்கள் இகழ மாட்டார்களோ?

வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,