பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

புனையப் பெறாமல் உள்ள வெறுங் கூந்தலைத் தடவுவேன்” என்று தலைவி வருந்தி உரைத்தாள்

143. தடுக்காமல் இருந்தனையே

'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று, அத்த ஒமை அம் கவட்டு இருந்த இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி கரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி நல் அடி பொறிப்பத் தாஅய்ச் சென்றுஎனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.

- உறையனார் குறு 207

“நம்முடைய செலவைத் தலைவியிடத்துச் சொல்லிச் செல்வோமாயின் செல்லுதல் அரியதாகும் என்று கூறி, பாலை நிலத்தில் உள்ள ஒமை மரத்தினது அழகிய கிளையின் கண் இருந்த, இனத்தினின்று பிரிந்து வந்த பருந்தினது, தனிமையை வெளிப்படுத்தும் தெளிந்த ஒசையானது அரிய அவ் வழியில் செல்லும் மனிதர்களுக்கு நல்ல துணையாக அமைதற்கு இடமாகிய கற்களை உடைய மலையின் அருகில் உள்ளதாகிய பழமையான பலரும் சென்று வருவதாகிய சிறிய வழியில், தம் நல்ல அடிகள் சுவடு செய்ய பிரிந்து சென்றார் என்று கேள்வியுற்ற நம்முடைய அன்பர் பலராவர்” என்று தலைவன் பிரிவிற்குத் தலைவி தோழியிடம் கூறினாள்.

144 மடந்தையின் நட்பு சுரந்தலைப் பட்ட நெல்லிஅம் பசுங் காய் மறப்புலிக் குருளை கோள்இடம் கரக்கும் இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல், கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் தளை அவிழ் பல் போது கமழும் மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ குறு 209