பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 73

"குறுக அடியிட்டு நடக்கும் நடை கொண்ட தோழி, வழிப்போவரது உயிரைத் தாங்குதற்குரிய சுரத்தையுடைய நெல்லி மரத்தினது அழகிய பசிய காய்கள் வலியை உடைய புலிக்குட்டிகள் இரை கொள்ளுமிடத்தில் உதிர்ந்து உருளு கின்ற கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்ற யாம், அங்ங்னம் சென்றவிடத்துப் பல பொருள்களை நினைத்தேன் அல்லேன். காட்டு வழியினிடத்தே தழைத்த வளைந்த கிளை களை உடைய வெட்சியின முருக்கவிழும் பல பேரரும்புகள் மணக்கின்ற மையைப் போன்ற கரிய கூந்தலைப் பெற்ற தலைவியினது நட்பையே நினைத்திருந்தேன்” என்று தலைவன் தோழியிடம் தலைவியின் பால் கொண்ட அன்பினை உரைத்தான்.

145. அருளுடையவர் அல்லர் அம் சில் ஒதி ஆய் வளை நெகிழ நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழி - தோழி - எஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை. வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, ஆராது பெயரும் தும்பி நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே.

- காவன் முல்லைப் பூதனார் குறு 211 "தோழியே! வேனிலால் கரிந்து போன மரா மரத்தினது ஓங்கிய வெவ்விய கிளைகளில் வேனிற்காலத்து மலர்ந்த ஒற்றைப் பூங்கொத்தைத் தேன் உண்ணும் தும்பி என்னும் இன வண்டானது ஊதி, அதன் கண் தேன் இன்மையினால் உண்ணாமல் மீளுகின்ற நீரில்லாத இடங்களையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவர் அழகிய சில வாகிய கூந்தலையுடைய நினது வளைகள் நெகிழும்படி, நம் விருப்பத்திற்கு உடன்பட்டு நம்பால் அருள் செய்யாது. நம்மைப் பிரிந்து சென்றவ்ராகிய தலைவரின் பொருட்டு அஞ்சுதல் நீங்கினோம்” என்று தலைவிக்குத் தோழி

இயம்பினாள்