பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

146. கடமை முடித்தே மீள்வார் நசை நன்கு உடையர் - தோழி! - ஞெரேரெனக் கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் பசிப் பிணிக்கு இறைஞ்சிய பருஉப் பெருந் ததரல் ஒழியின் உண்டு, அழிவுஇல் நெஞ்சின் தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, நின்று வெயில் கழிக்கும் என்ப - நம் இன்துயில் முனிநர் சென்ற ஆறே.

- கச்சிப் பேட்டுக் கொற்றன் குறு 213 "தோழி, தலைவர் உன்னிடம் விருப்பம் மிக உடையவர் நம்மோடு சேர்ந்து செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்து சென்றார் அவர் சென்ற வழியில் விரைவாகக் கிளைத்த கொம்புகளைன் கொண்ட முதிய ஆண் மான், தன் பசி நோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுக் காலால் வள்ைந்த பருத்த பெரிய மரப்பட்டையைத் தன் குட்டி உண்டபின் எஞ்சியதைத் தான் உண்டு பின் குற்றமில்லாத நெஞ்சினோடு துள்ளி நடக்கும் இயல்கினை உடைய தன் குட்டிக்கு நிழலாக நின்று வெயிலில் இருந்து காக்கும்” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறினாள்.

147. வருவார் இன்று படரும் பைபயப் பெயரும், சுடரும்

என்றாழ் மா மலை மறையும் இன்று அவர் ஒருவர்கொல், வாழி - தோழி, - நீர் இல் வறுங் கயம் துழைஇயஇலங்கு மருப்பு யான்ை குறும் பொறை மருங்கின் அமர்துல்ன தjஇக் கெரடு வரி இரும் புலி காக்கும் நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே.

- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் குறு 215 "தோழி, உன்னுடைய துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும் ஒளிவீசும் செங்கதிரும் பெரிய மலைக்குப்பின் கண் மறைந்தது ஆதலின் நீரற்று வறண்ட குளத்தைத் துழாவிய ஒளிவீசும் கொம்புகளை உடைய ஆண் யானைகள், சிறிய குண்டுக் கற் களுக்கருகில் தாம் விரும்புகின்ற பிடிகளைத் தழுவிக் கொண்டு