பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

கல் உயர் நண்ணியதுவே - நெல்லி

மரையினம் ஆரும் முன்றில்

புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. - மாயேண்டன் குறு 235

'வாடைக்காற்றே! நெல்லிக்காயை மானின் கூட்டம் உண்ணுகின்ற முன்னிடத்தை உடைய புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய நல்ல தலைவியினது ஊரானது, பாம் பின் தொங்குகின்ற தோலை ஒத்திருக்கும் தூய வெள்ளிய அருவியை மலையின் உயரத்திலே கொண்டுள்ளது. அங்கே யுள்ள தலைவியை நீ பாதுகாத்து வாழ்வாயாக!” என்றாள் தலைவன்

154. விரைந்து சென்றது. நெஞ்சம்!

அஞ்சுவது அறியாது, அமர் துணை தழிஇய, நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும், எஞ்சிய, கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் சேய அம்ம, இருவாம் இடையே; மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு கோட் புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ - முயக்கிடை மலைவே?

- அள்ளுர் நன்முல்லை குறு 237 “பாக! அஞ்சுதலை அறியாமல் நாம் விரும்பும் தலை வியைத் தழுவும் பொருட்டு என் நெஞ்சு நம்மை விட்டுப் பிரிந்து சென்றது. ஆயினும் எஞ்சியுள்ள கையால் தழுவுதல் நெகிழுமாயின், நம் நெஞ்சு சென்று தழுவிய அதனாற் பயன் யாது? எனக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள இடங்கள் மிக்க சேய்மை உடையன. தலைவியோடு சேர்தற்கு இடை யில் உள்ள வழித்தடையாகிய கொல்லும் புலியானது கரிய கடலின் ஒலி போல ஆரவாரம் செய்து வலமாக எழுந்து உலாவுகின்ற சோலைகள் எத்தனை என்று எண்ணுவேன்?” என்றான் பொருள் முற்றித் திரும்பும் தலைவன்

155. மாலை வருமுன் தேரைச் செலுத்துக!

பரல் அவற் படு நீர் மாந்தித் துணையோடு, இரலை நல் மான் நெறிமுதல் உகளும்