பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 79

மாலை வாராஅளவைக், கால் இயல் கடு மாக் கடவுமதி - பாக! - நெடு நீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

- நாமலார் மகன் இளங்கண்ணன் குறு 250 “தேர்ப் பாகனே! பருக்கைக் கற்களை உடைய பள்ளத் திலே தங்கிய நீரை உண்டு ஆண் மான் பெண் மானோடு வழியினிடத்துத் துள்ளி விளையாடுகின்ற மாலைக் காலம் வருவதற்கு முன்னே, ஆழ்ந்த நீரிலுள்ள ஒன்றை ஒன்று எதிர்த்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும், ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி துன்பச் சுழற்சியில் இருந்து நீங்கக் காற்றுப் போலக் கடுகிச் செல்லும் இயல்புடைய விரைகின்ற குதிரையைச் செலுத்துவாயாக!” எனப் பாங்கனிடம் கூறினான் தலைவன்.

156. வருவார் ஒடோடி! கேளார் ஆகுவர் - தோழி, - கேட்பின், விழுமிது கழிவது ஆயினும், நெகிழ் நூல் பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோஒலி கழை நிவந்த ஒங்கு மலைச் சாரல், புலி புகா உறுத்த புலவு நாறு கல்அளை ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. 5

  • - பூங்கண்ணன் குறு 253 "தோழியே! ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த, உயர்ந்த மலைப்பக்கத்தில் புலி தனக்குரிய உணவை இட்டு வைத்திருக்கும் புலால் நாற்றம் வீசும் மலைக்குகையின்ரிடத்து வழிச் செல்லும் மனிதர் தங்கும் கொடுமுடிகள் உயர்ந்த விளக்கத்தை உடைய மலை களைக் கடந்து சென்ற தலைவர் நின் துயரைக் கேளார் ஆவார்; கேட்டாராயின் சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும் நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர்மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து, வருந்துகின்ற பெரிய