பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அழகு நீங்கிய நினது இன்றைய துயரம் கெடும்படி பின்பும் தாமதியாமல் வருவார்” என்றாள் தோழி தலைவியை நோக்கி. 157. தூது எதுவும் வரவில்லை இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன; வாரா - தோழி, துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார் - 'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினரால் என, வரூஉம் துதே. - பார்காப்பான் குறு 254 "தோழி, இலையில்லாத அழகிய கிளைகளில் திரளான வண்டுகள் ஆராவாரிக்கும்படி, முலையை ஒத்த அழகிய மெல்லிய அரும்புகள் விரிந்த கோங்க மரத்தில் முதல் பூக்கள் தோன்றின. ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருதலை விரும்பிச் சென்ற நம் தலைவர் மீண்டு வந்தனர் என்று அறிவித்தற்கு வரும் தூதுகள் இன்னும் வந்தில. நம்மைப் பிரிந்து சென்ற அவர் துயிலுவதற்கு இனிய இராக் காலத்தில் உடன் துயிலுதலை மறந்தனர். தாம் பழகிய நறிய என் கூந்தலாகிய பாயலையும் நினையார் ஆயினர்,” என்றாள் தலைவி தோழியை நோக்கி.

158. யானை தன் சுற்றத்தைக் காக்கும்:

பொத்து இல் காழ அத்தயாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி, - மறம் கெழு தடக்கையின் வாங்கி, உயங்கு நடைச் சிறு கட் பெரு நிரை உறுபசி தீர்க்கும் தட மருப்பு யானை கண்டனர் - தோழி, தம் கடன் இlஇயர் எண்ணி, இடம்தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம் வெங் காதலர் சென்ற ஆறே.

- கடுகுபெருந்தேவன் குறு 255 "தோழியே! தம்முடைய கடமையை நிறைவேற்றும் பொருட்டு, இடங்கள் தோறும் விருப்பத்தை உடைய பொருள்