பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 81

முயற்சிக்கண் தோய்ந்த உள்ள பிணிப்பினால் நாம் விரும்பும் தலைவர் பிரிந்து சென்றார். அவர் சென்ற அச்சம் விளைவிப்ப தான அரு வழியில் குறையற்ற வயிரம் பாய்ந்த யாம்ரங்களின் பொரிந்த திரண்ட அடியைத் தம் கொம்பால் குத்தி வீழ்த்தி வன்மை பொருந்திய வளைந்த கையினால் அதை கொண்டு வந்து தந்து வருந்திய நடையையும் சிறிய கண்களையும் உடைய பெரிய யானைகளின் மிக்க பசியைத் தீர்க்கின்ற, வளைந்த பெரிய கொம்புகளை உடைய ஆண் யானையைக் காண்பார்” என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

159. தேரையும் தடுத்தது கண்ணிர்!

‘மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் பிணங்கு அளில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, மான் ஏறு உகளும் கானம் பிற்பட, வினை நலம் படிஇ வருதும் அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்? எனச் சொல்லாமுன்னர், நில்லா ஆகி, நீர் விலங்கு அழுதல் ஆனா தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

- ஆசிரியர் ? குறு 256 “பொலிவை உடைய குழையை அணிந்தவளே! நீலமணி ஒழுகினாற் போன்ற கரிய கொடியாகிய அறுகினது பிணிப்பு நீங்கிய மெல்லிய தண்டைப் பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட ஆண் மான்-துள்ளுகின்ற காடு பின்னாகச் சென்று தொழில் நன்மை உண்டாகப் பெற்று மீண்டு வருவோம்; அக் காலத்தளவும் நின்னால் பொறுத்திருக்க இயலுமோ? என்று நாம் சொல்வதற்கு முன்பாகவே தலைவியின் கண்கள் பண்டைய நிலையில் இல்லாமல் கலங்கி நீரால் மாறுபட்டு அழுகை நிற்காமல் உம் தேரைத் தடை செய்தன." என்று தலைவன் தலைவியிடம் உரைத்தான்.

160. வருவர்கொல் தோழி?

குருகும் இரு விசும்பு இவரும், புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;