பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 83

அறநினைவு இல்லாத தாய் தன் வீட்டில் நின்னைப் பிரிந்து தான் மட்டும் தனியே இருப்பாளாக, யான் நெடுந்துரத்தில் உள்ள நாட்டின்கண் வானத்தைத் தொடும்படி உயர்ந்து குறுக்கிட்ட மலையின் அடிவாரத்தில் தொடும்படி உள்ள கரும்பு நட்ட பாத்தியைப் போன்ற பெரிய ஆண் யானை பினது அடிச் சுவட்டின்கண் தங்கிய நீரை அத் தலைவரோடு நெல்லிக்காயைத் தின்ற முள்ளைப் போன்ற பற்கள் விளங்கும் படி நீ உண்ணுதலை நினைத்தேன்” என்று தோழி தலைவிக்கு உணர்த்தினாள்.

162. தூது அனுப்ப மறந்தாரோ?

நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன் துண்ை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ - மறப்பு அரும் பனைத் தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துதே?- நக்கீரர் குறு 266 "தோழியே நம்மைப் பிரிந்து சென்ற வன்மையை உடை யோராகிய தலைவர் பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நம்மை மதித்து நமக்கு ஒன்றைக் கூறிவிட்ாரா யினும் தமக்குப் பொருந்திய துன்பத்தை உடைய இராக் காலங்களில் இனிய துண்ையாக இருந்த மனைத் தோட்டத்தி லுள்ள வேங்கை மரத்திற்கும் தூதுமொழி அனுப்புவதை மறந்தனரோ?” என்றாள் தலைவி பாங்கியிடம்

163. அறனை அறிந்தவர் பிரியார் இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் ஒருங்குடன் இயைவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் கோல்அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய, ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் உறல் முறை மரபின் கூற்றத்து அறன் இல் கோள் நற்கு அறிந்திசினோரே -

- காலெறி கடிகையா குறு:2er