பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“நெஞ்சே, நாள்தோறும் வாழ்நாள் முடிவு வரையறுக்கப் பட்ட உயிர்கள்பால் முறை சொல்லும் மரபை உடைய கூற்றுவனது கண்ணோட்டமில்லாத கொலைத் தொழிலை நன்றாக அறிந்தோர், பெரிய் இடத்தையுடைய நிலத்தின் கண் திரண்ட பயனை உடைய செல்வம் ஒருங்கே பொருந்துவ தாயினும், கரும்பின் அடிப் பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டாற் போன்ற சுவையையுடைய வெண்பல் அமைந்த வாயினிடத்து ஊறிய குற்றமில்லாத இனிய நீரையும், திரட்சி அமைந்த சிறிய வளையையும் உடைய இளைய தலைவி தனியளாய் நீங்கி இருப்ப முயற்சியின் பொருட்டாகத் தாம் மட்டும் பிரிந்து செல்லார்,” என்றான் நாளது சின்மையும் இளமையது அருமையும் எண்ணி தன் நெஞ்சிடம் தலைவன்

164. தவிர்ப்பான் பயணம்

அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் பெருங் காடு உளரும் அசைவளி போலத், தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! நொந்தனை ஆயின், கண்டது மொழிவல், பெருந்தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல, ஏமாந்தன்று, இவ் உலகம்: நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.

- சிறைக்குடி ஆந்தையார் குறு 273 “இரவில் தாதுகளை உடைய அரும்பு விளங்க பெரிய காட்டினிடத்தே தடவி வ்ருகின்ற அசையும் மெல்லியப் பூங்காற்றைப் போலக் குளிர்ந்த நறுமணம் வீசுகின்ற ஒள்ளிய நெற்றியை உடையோய், நீ தலைவன் பிரிவான் என்று வருந்தி னாயானால், யான் அறிந்ததைச் சொல்லுவேன் கேட்பாயாக பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப் பக்கத்தில் அத் தேனிறாலைப் பெறும் பொருட்டாகப் பழைய கண்ணேணியின் மேல் அறியாமல் ஏறிய அறிவில்லாதவனைப் போல் இந்த உலகம் ஏமாந்தது நாம் உயிரோடு இருக்கின்ற வரையில் தலை வன் நின்னைப் பிரிந்து செல்லான் இதனைத் தெளிவாயாக' என்று கூறித் தோழி தலைவிக்குத் துணிவுண்டாக்கினாள்