பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 等 85

165. தோன்றாது வெம்மை

புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅத்து இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, விடுகணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு, வருநர்ப் பார்க்கும் வன்கன் ஆடவர் நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னாக் கானமும், இனிய பொன்னொடு மணி மிடை அல்குல் மடந்தை அணிமுலை ஆகம் முயங்கினம் செலினே.

- உருத்தின் குறு 274 “நெஞ்சே, பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகலன்களை அணிந்த அல்குலை உடைய தலைவி யினது அழகிய முலைகளோடு கூடிய மார்பை நினைத்துச் சென்றால், புறாவினது முதுகைப் போன்ற புல்லிய அடியை உடைய உகாய் மரத்தினது மணியைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படி விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து உயர்ந்த இடத்தின் மேல் ஏறி, வழியிலே வருபவரைப் பார்க்கும் தறு கண்மையை உடைய ஆறலைக் கள்வர், நீரை விரும்புகின்ற வேட்கையினால் மரப் பட்டையை மென்று அவ் வேட்கை நீங்கும் துன்பம் மிகுந்த காடுகளும் இனிய வாகும்” என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.

166. எப்போது வரும் பருவ காலம் ஆசு இல் தெருவின் நாய் இல் வியன்கடை, செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஒர் இல் பிச்சை ஆர மாந்தி, அற்சிர வெய்ய வெப்பத் தண்ணிர் சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே - 'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, எக் கால் வருவது? என்றி அக் கால் வருவர், எம் காதலோரே.

- ஒரிற் பிச்சையார் குறு 277 "அறிவனே, மின்னலைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான, இறுதி மழை பெய்யும்