பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 87

சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, குன்று தலைமணந்த கானம் சென்றனர் கொல்லோ - சேயிழை நமரே?

- குடவாயிற் கீரத்தன் குறு 281 “சிவந்த பொன்னணி உடையாய், நம் தலைவர் வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த பசிய அடியையும் கருக்கையும் திரட்சியையுமுடைய பனையினது உச்சியிலுள்ள வெள்ளிய குருத்தோலையின்கண் வைத்த பாலை நிலத்திலுள்ள வேப்ப மரத்தினது நெருக்கத்தையுடைய வெள்ளிய மலரை அழித்தல் ஆர்த்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு மலைகளோடு சேர்ந்த காட்டைக் கடந்து சென்றனரோ?” என்று தலைவி தோழியிடம் இயம்பினாள்.

169. வருவார் மீண்டும் செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும் கார் எதிர் தண் புனம் காணின், கைவளை, நீர் திகழ் சிலம்பின் ஒராங்கு விரிந்த வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போலச், சோர்குவஅல்ல என்பார்கொல் - நமரே.

- நாகம் போத்தன் குறு 282 ‘நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த பருவம் வாய்ந்த வரகினது காற்றால் ஒலித்தலை உடைய நாற்றின் மிக்க கருத்த ஓர் இலையை, மானின் இளங்கன்று கவ்வி ஒருவேளைப் பசியைப் போக்கிக் கொள்ளும் கார் காலத்தை ஏற்றுக் கொண்ட திண்ணிய கொல்லையைக் காண்பாராயின், நீர் விளங்கு கின்ற மலைப் பக்கத்தில் ஒருபடித்தாக மலர்ந்த வெள்ளிய கூதாளத்தின் உள் துளை உடைய அழகிய புதிய மலர்கள் காம்பில் கழன்று உதிர்தலைப் போல நின் க்ை வளைகள் சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவரோ? எண்ணார்." என்று தோழி தலைவிக்குக் கூறினாள்