பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 89

"இனிய ஆண்புறா பலமுறை புல்லிய புறத்தை உடைய பெண்புறாவை அழைத்து இமைப் பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! இங்ங்னம் அவை இருப்பவும் ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி ஒற்றைப் பருந்து இருக்கின்ற வானளாவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற தலைவர் நாள்தோறும் விடியற்காலம் நீங்கிப் பகற்காலம் வரவும் அப்பொழுதும் வந்திலர். எல்லாப் பகலின் எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார். எங்கே இருக்கின்றாரோ? இங்கே அவர் மீண்டும் வருவேன் என்று சொன்ன பருவம் இதுவே பிறிதன்று” என்று தலைவி தோழியிடம் கூறினாள்.

172. துயிலை மறந்தன விழிகள் கான இருப்பை வேனில் வெண் பூ வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, களிறு வழங்கு சிறுநெறி புதையத் தாஅம் பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகித், தெள் நீர் நிகர்மலர் புரையும் நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பணியே.

- ஒதலாந்தையார் குறு 329 “தோழியே! காட்டிலே வளர்ந்த இருப்பை மரத்தில் வேனிற் காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், காற்றால் அலைக்கப்பட்ட நெடிய கொம்புகள் உதிர்வதனால் காம்பினின்றும் கழன்று, களிறுகள் செல்லும் சிறிய வழி மறையும்படி பறக்கின்ற விளங்கிய மலைகளை உடைய கடத்தற்கரிய பாலை நிலத்தைக் கடந்து சென்ற தலைவரை நினைத்துப் பயிலுகின்ற இருளை உடைய நள்ளிரவில் துயிலல் அரிதாகி தெள்ளிய நீரிடத்துள்ள ஒளியுடைய மலரை ஒக்கும் நல்ல மலர்ந்த குளிர்ச்சி பொருந்திய கண்ணினிடத்து நீர்த் துளிகள் எளிதில் அரும்பின” என்று தலைவி வருந்திக் கூறினாள்.