பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

.ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

173. விட்டுப் பிரியார் நம்மை நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, ஆறு செல் வம்பல் தொலைய, மாறு நின்று, கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் கடுங்கண் யானைக் கானம் நீந்தி, இறப்பர்கொல் வாழி - தோழி, - நறுவடிப் பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன நல் மா மேனி பசப்ப, நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.

- வாடாப் பிரமந்தன் குறு 331 "தோழியே! நறிய வடுவையும் பசிய அடியையும் உடைய

மா மரத்தினது அழகிய தளிரை ஒத்த நல்ல மாமை நிறம் பசலை அடையும்படி நம்மைக் காட்டிலும் தலைவருக்குச் சிறந்ததாகத் தோன்றுகின்ற பொருளைக் கொணரும் பொருட்டு நெடிய மூங்கில் உலர்ந்த நீரில்லாத அரிய இடத் தில் வழிப் போக்கர்கள் அழியும்படி அவர்களுக்கு எதிராக நின்று வளைந்த வில்லை உடைய மறவர்கள் காட்டைக் கொள்ளை யிட்டு வாழும் கடுங்கண் தறுகண்மை உடைய யானைகள் நிறைந்த காட்டைக் கடத்து செல்வாரோ?” என்றாள் தோழி தலைவியிடம்.

174. தேரும் வந்து சேர்ந்தது திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செலச், செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் வந்தன்று, பெருவியற் தேரே, பனைத் தோள் விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.

- பெருங்குன்றுரர் கிழார் குறு 338

“மூங்கிலைப் போன்ற தோள்களையும் விளங்கிய இல்லி

னிடத்தே அடங்கிய கற்பினையும் உடைய அழகு பொருந்திய