பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - விகை - உரை : த. கோவேந்தன் : 91

தலைவியே, மிக்க வெற்றியையுடைய தலைவனது தேரானது, தனிமையால் உண்டான துன்பம் நீங்கும் வண்ணம் முறுக்கின கொம்பையுடை இரலை என்னும் தலைமை உடைய நல்ல ஆண் மான் மென்மையையும் மடப்பத்தையும் உடைய பெண் மானோடு தாம் தங்குதற்குரிய நிழலிடத்தே தங்கி மலர்கள் அடர்ந்த அகன்ற பிணக்கத்தை உடைய துற்றினிடத்தே உறங்கி பகற்பொழுது போனமையின் செழுமிய பயற்றம் பயிரைக் கறித்துத் தின்னும் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் பின் பனியையும் உடைய கடை யாமத்தையும் குளிர்ந்த பனியையும் உடைய அச்சிரக் காலம் அதோ வந்தது.” என்று தலைவன் வந்ததைத் தோழி தலைவியிடம் அறிவித்தாள்.

175. தலைவனுடன் செல்லுதலே நன்றாம். நினையாய் வாழி - தோழி, - நனைகவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென - மிகு வலி இரும் புலிப் பகுவாய் ஏற்றை - வெண் கோடு செம் மறுக் கொளீஇ விடர் முகைக் கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை. வாடு பூஞ் சினையின், கிடக்கும் உயர்வரை நாடனொடு பெயருமாறே.

- ஈழத்துப் பூதன் தேவன் குறு 343 "தோழியே மிகுந்த ஆற்றல் படைத்த பெரிய ஆண்புலி, மதத்தால் நனைந்த கவுளை உடைய தலைமைப் பண்பு மிகுந்த யானையினது அழகிய முகத்தில் பாய்ந்ததால் அவ் யானையின் வெள்ளிய கொம்பைத் தனது அரத்தத்தால் செவ்விய கறையைக் கொள்ளுமாறு செய்து பிளப்பை உடைய கற்குகை இடத்துள்ள மேல்காற்று வீசிடவும் கரிய அடியை உடைய வேங்கை மரத்தினது வாடிய பூவைக் கொண்ட கிளையைப் போல இறந்து கிடக்கும் உயர்ந்த மலைநாட்டுத் தலைவனுடன் நீ போகும் திறத்தை நினைப் பாய், நீ வாழ்வாயாக!” என்றாள் தோழி தலைவியிடம்.

176. கலந்தால் நன்மை உண்டாகும் மல்கு சுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல் குமரி வாகைக் கோலுடை நறு வி