பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 93

சொல்லினம் ஆயின், செல்வர் கொல்லோ - ஆற்று அயல் இருந்த இருங்கோட்டு அம் சிறை நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும் மலையுடைக் கானம் நீந்தி, நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

- ஆலத்துரர் கிழார் குறு 350 "தோழியே! ஒன்று கூறுவேன் கேட்பாயாக வழியின் அயலிலே இருந்த பெரிய கூட்டமாகிய அழகிய சிறகுகளை யும் நெடிய காலையும் உடைய கணந்துள் பறவைகள் தமக்கு ஊறு விளைவிக்கும் வேட்டுவ மக்கள் ஊர் என்பதை அறி வுறுத்தி வழிப் போக்கர் கூட்டத்தை அவ் இடத்தினின்றும் நீங்கச் செய்யும், மலையை உடைய நாட்டைக் கடந்து நிலையில்லாத பொருள் வேட்கையினால் நம்மைப் பிரிந்து செல்வோர், அவர் பிரியும் காலத்து அவர் முன்னே நின்று நீர் பிரியின் யாம் பணியின் கடுமையால் தாக்குண்டாற் போல நடுங்கு வோம், ஆதலின் போதலை ஒழிமின் என்று கூறி யிருப்போமாயின் போயிருப்பாரோ?” என்றுரைத்தாள் தோழி தலைவியிடம்

179. மாலையின் வரவு நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்துஅன்ன கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை அகல்இலைப் பலவின் சாரல் முன்னிப், பகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை அறிவேன் - தோழி! - அவர்க் காணா ஊங்கே.

- கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறு 352 "தோழியே! ஆழமான நீரினிடத்து வளர்ந்த ஆம்பலினது இலையின் புறத்தைப் போன்ற வளைந்த மெல்லிய சிறகை உடையனவாகிய கூரிய நகங்களை உடைய வெளவால்கள், அகன்ற இலைகளை உடைய பலா மரங்களைப் பெற்ற மலைச் சாரலை நோக்கிப் பகற்காலத்தில் தான் உறைந்த பழையமரம் தனிக்கும்படி செல்லும் சிறிய புல்லிய மாலைக்