பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 95

செவ்விய தண்டுகளைப் பெற்ற அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணை உடைய மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுப், புள்ளிய அடியை உடைய உகாஅய் மரத்தினது புள்ளிகள் மிக்க நிழலின் கண்ணே தங்குகின்ற கடத்தற்கரிய காட்டைக் கடத்தல் இனிமை உடையதோ” என்று தலைவனிடம் தோழி கூறினாள்

182. ஊர் செல்வோமாக

அத்த வாகை அமலை வால் நெற்று, அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம் செல்வாம் - தோழி, - நல்கினர் நமரே.

- குடவாயிற் கீரத்தனார் குறு 369 "தோழி! நம் தலைவர்.அருளாற்றி செய்தனர். ஆதலின் வழியிலே உள்ள வாகை மரத்தின் ஒளியை உடைய வெள்ளிய நெற்றுகள் உள்ளீடு, பரலை உடைய சிலம்பைப் போல ஆரவாரிக்க மேல்காற்று அலைக்கின்ற பாலை நிலத்தில் செல்வோமாக” என்று தலைவியை நோக்கித் தோழி கூறினாள்.

183. இனிதாகுக மாலை

ஞாயிறு காணாத மாண் நிழற் படிஇய, மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், தண் மழை தலையவாகுக - நம் நீத்துச் சுடர் வாய் நெடு வேற் காளையொடு ம. மா அரிவை போகிய சுரனே! - கயமனார் குறுந் 378

“நம்மைப் பிரிந்து, ஒளி பொருந்திய வேலை உடைய இளைய வீரனோடு மடப்பத்தையும் மாமையையும் உடைய தலைவி சென்ற பாலை நிலம், செங்கதிர் சுடாமல் மரத்தின் நிழல் பொருந்திய மலையினிடத்தே உள்ள சிறிய வழியின் கண் மணல் மிகப் பரவப் பெற்றுக் குளிர்ந்த மழையைப் பெய்விப்பாயாக!” என்று செவிலித்தாய் தெய்வத்தை வழி பட்டுக் கூறினாள்