பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

184. வராவிட்டால் என் செய்வோம்

விசும்பின் கண் புதையப் பாஅய், வேந்தர் வென்று எறி முரசின் நன் பல முழங்கி, பெயல் ஆணாதே, வானம்; காதலர் நனிசேய் நாட்டர்; நம் உன்னலரே; யாங்குச் செய்வாம்கொல் - தோழி, - ஈங்கைய வண்ணத் துய்ம்மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே.

- கருவூர்க் கதப்பிள்ளை குறு 380 "தோழியே! வானம் மறையும்படி பரவி வேந்தர்கள் பகைவர்களை வென்று அறைகின்ற முரசினைப் போல நன்மையை உடைய பலமுறை முழங்கி முகில் மழை பெய்தலை நீங்காது. தலைவரோ மிகவும் தொலைவான நாட்டில் உள்ளார். அவர் நம்மை நினைத்தாரல்லர். நல் நிற்மும் துய்மையும் உடைய ஈங்கை மலர்கள் உதிர்ந்து நிற்க, இனிமேல் தோன்றுதற்குரிய கடிய பனிப் பருவத்தில் என்ன செய்வோம்?” என்று தோழி, தலைவியை நோக்கிக் கூறினாள்:

185. செல்க இப்போதே!

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,

குறி நின்றனனே, குன்ற நாடன்,

இன்றை அளவைச் சென்றைக்க' என்றி,

கையும் காலும் ஒய்வன ஒடுங்கத்

தீ உறு தளிரின் நடுங்கி,

யாவதும் இலையான் செயற்கு உரியதுவே.

- படுமரத்து மோசிகீரன் குறு 383

“நீ உடன்போக இசைந்தமையால் நான் கூறத் தலைவன் குறியிடத்தே வந்து நின்றான்; நீயோ, இன்றைய பொழுது கழிந்து செல்லலாம் என்று கூறினாய் கையும் காலும் தளர் வுற்றுச் செயலிழந்து போகும்படி நெருப்பில் விழந்த தளிரைப் போல நடுங்கி யான் செய்தற்கு உரியது யாதும் இல்லையே” என்று தோழி தலைவியிடம் வருந்திச் சொன்னாள்