பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ; 97

186. இனிதாகும் அவளுக்கு நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடாதாகும்; கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருது ஒழுங்கைத் தோடு நிரைத்தன்ன, முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், யானை கைம்மடித்து உயவும் கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.

- ஒளவையார் குறு 388 "தண்ணிரைத் தன்னுடைய அடியிலே கொண்டுள்ள வரிசை யான இதழ்களை உடைய குவளை மலரானது, மேல்காற்று வீசினாலும் வாடாதது ஆகும். கவனைப் போன்ற துகத்தின் பிணிப்புப் பொருந்தாமையால் வருந்துதலை உடைய உப்பு வணிகருடைய எருதுகள் பூட்டிய வ்ண்டி களின் தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்த மரக் கிளைகளைப் பிரித்தற்கரிய வன்மை இல்லாமையால் யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற பாலை நிலங்களும் நூம்மோடு வந்தால் தலைவிக்கு இனிமை உடையனவாகும்” என்று தோழி தலைவனிடம் கூறினாள்.

187. செல்ல வேண்டா எல்லும் எல்லின்று; பாடும் கேளாய் - செல்லாதீமோ, சிறுபிடி துணையே! - வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, வளை அணி நெடு வேல் ஏந்தி, மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.

- உறையூர் முதுகொற்றன் குறு 390 "சிறிய பெண் யானை போன்றவளுக்குத் துணையாகி யவனே! கதிரவனும் மறைந்தான்; வணிகர் கூட்டம் வந்து அடைந்ததாகப் பகைப்புலத்தே கொள்ளும் பகைமை போல, வளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி காவல் காட்டினி டத்தே வந்து பெயரும் ஆறலைக் கள்வரது தண்ணுமை என்னும் இன்னியத்தினுடைய முழக்க ஒலியையும் கேட்