பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 101

நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப், புதல்வன் ஈன்றெனப்பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி, துஞ்சுதியோ, மெல் அம் சில் ஒதி? என, பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, உள்ளினென் உறையும் எற் கண்டு மெல்ல முகை நாண் முறுவல் தோற்றி, தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.

- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் நற் 370 “பான, வருக. நாம் நினைத்து நகையாடுவோம். சிறந்த அணிகலன் அணிந்த தலைவி முன்பு சுற்றத்தார் உடைய வளாய் முதற் கருப்பத்தில் நம் குடி செழிக்குமாறு மகனைப் பெற்று உதவினாள். நெய்யுடனே ஒளிவீசும் வெண்சிறு கடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறு மாறு ஒய்ந்து படுத்திருந்தாள். அவளை யான் நெருங்கி, “மெல்லிய அழகிய சிலவாகிய கூந்தலை உடையவளே! நீ புதல்வனைப் பெற்றுத் தந்ததனால் தாய் என்று பெயர் பெற்று அழகிய வரிகளும் ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப் புள்ள அல்குலும் உடைய முதுபெண்டு ஆகி இவ்வாறு துயில்கின்றாயோ?” என்று கூறியவாறே பல மாட்சிமைந்த அவள் வயிற்றில் என் கையிலிருந்த குவளை மலரால் ஒற்றினேன். ஒற்றியவாறே நான் பல கருதினேன். அப்போது அவள் கண் விழித்து அங்கே இருந்த என்னைப் பார்த்து மெல்ல முல்லையின் முகைபோல் புதிய முறுவல்கட்டி, தன் அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைக் கையால் மூடிக் கொண்டு மகிழ்ந்தாள். அவள் இப்பொழுது ஊடல் கொண்டாளே” என்று தலைவன் தவித்தான்.

180. பயனில சொல்லாதே நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமும், தோளும், திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;