பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


183. பொய்ம் மொழியால் ஆவது என்?

அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் - கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு வேழ வெண் புணை தழிஇ, பூமியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய நெருநல் ஆடினை, புனலே, இன்று வந்து, ஆக வன முலை அரும்பிய சுணங்கின், மாசு இல் கற்பின், புதல்வன் தாய் என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும்தில்ல! சுடர்ப் பூந்த தாமரை நீர் முதிர் பழனத்து, அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், பல் வேல் மத்தி, கழா அர் அன்ன எம் இளமை சென்று தவத் தொல்லஃதே; இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

- - பரணர் அக 6