பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

“ஆதன் அவினி வாழ்க வயல் விளைவு மிகுந்து விளைக. இரவலர் பலரும் வருக என்று இங்ஙனம் இல்லறத்துக்கு வேண்டுவனவற்றையே எண்ணித் தலைவி ஒழுகினாள். அது வன்றி அவள் வேறு எதனையும் எண்ணவில்லை. யாங்கள் பல இதழ்களையுடைய கருங்குவளையுடன் நெய்தல்கள் ஒப்ப மலரும் குளிர்ந்த துறைகளையுடைய ஊரனின் நட்புப் பிறவி தோறும் இடையறாது சிறப்பதாகுக என்று ஒழுகினோம்” என்று தோழி தலைவனை நோக்கி வேட்புடன் சொன்னாள்.

3. மனை வாழ்க்கை பொலிக! ‘வாழி ஆதன், வாழி அவினி

பால் பல ஊறுக பகடு பல சிறக்க’ என வேட்டோளே, யாயே, யாமே, ‘வித்திய உழவர் நெல்லொடு பெயரும், பூக் களுல் ஊரன் தன் மனை வாழ்க்கை பொலிக’ என வேட்டேமே. - ஐங் 3 தோழி “ஆதன் அவினி வாழ்க, பசுக்கூட்டம் பால் வளம் சுரக்க, எருமைகள் பல மிகுக!” என்று இங்ஙனம் தலைவி இல்லறத்தையே நினைந்து ஒழுகினாள். பின் விளைவு வேண்டி விதைத்தற்குச் சென்ற உழவர் முன்னே விளைந்து நின்ற நெல்லை அறுத்துக் கொண்டு மீள்பவர். இத்தகைய இயல்புடைய ஊரனின் பரத்தையர் மாட்டுக் கொண்ட ஒழுக்கம் நீங்கித் தன் மனையில் இருந்து விளங்குவானாக என்று விரும்பி ஒழுகி வந்தோம்” என்றாள்.

4. யாரும் உழுதுண்ணும் கழனியில்லை ‘வாழி ஆதன், வாழி அவனி பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஒதுக: என வேட்டோளே, யாயே, யாமே, ‘பூத்த கரும்பின், காய்த்த நெல்லின், கழனி ஊரன் மார்பு பழனம் ஆகற்க என வேட்டேமே. - ஐங் 4 “ஆதன் அவினி வாழ்க! பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறு உண்க; பார்ப்பார் மறை ஒதுக எனத்