பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


இனியோ, பிறிதொன்றையும் விரும்பாதபடி தடை செய்தற்குக் காரணமான பால் சுரப்பினால் மிகுதியாய்ப் பருத்துச் சரிந்த, தேமல் படர்ந்துள்ள இடங்களைத் தம் மிடத்தே கொண்டுள்ள மென்மையான எம் கொங்கைகள் அவரது நறிய சந்தனம் அணியப்பெற்ற நல்ல நிறம் விளங்கும் மார்பில் அழுந்திப் புடை படுக்குமாறு தழுவுதலைப் பெரிதும் விரும்புகின்றோம். ஆனால் அவரோ தம் மார்பில் பால் படுதலை அஞ்சினார்.

அப்போது, முன்பு எம்மை அனைத்தலை விடாத அவர் கைகள் இன்று நெகிழ்ந்தமை கண்டேன். கண்டு, செவிலித் தாயின் கையில் இருந்த மெல்லிய நடையுடைய என் புதல் வனை நோக்கி அவர் கேட்ப, பெரும! நீவிர் பரத்தை மகளிர்க்கே மிகவும் பொருந்தியுள்ளீர். யாம் இப்போதே செவிலித் தாயின் கையில் உள்ள எம் மகனுக்குத் தாயா தற்கே பொருந்தியவராயுள்ளேம்’ எனக் கூறி, மெல்ல என் மகனிடத்துச் சென்றேன். அவ்வாறு யான் புலந்து போவதைக் கண்டு தலைவர் என்னிடம் பணிவுடைமை தோற்றுவித்து ‘அவனுக்கு யாமும் அன்புடையோம் எனக் கூறி என் முதுகுப் பக்கமாக வந்து என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார். f

மிக்க பெயலான மழையை ஏற்றுக் கொண்ட பல முறை யும் உழப்பட்ட வயலின் செம்மண் போல் என் உள்ளம் நெகிழ்ந்தது; கலங்கி அவரை ஏற்றுக் கொண்டேன். என் நெஞ்சை வஞ்சித்துச் சென்ற புல்லறிவுடைய எனக்கு அவரைக் கண்டபோது ஊடுதல் கூடமோ? இதற்கு நான் என்ன செய்வேன்?” என்று தலைவி தோழியிடம் இயம்பினாள்.

186. வீரனின் மகிழ்ச்சியினும் அலர் பெரிது பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,