பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நல்ல மணமுடைய கூந்தலையும் சிறிய வளையல்களையும் உடைய பரத்தையை மணம் செய்து கொண்டாய் என ஊரவர் உரைப்பர். அப் பழிச் சொல் -

கொய்த பிடரி மயிரை உடைய குதிரைகள் பூட்டப் பட்ட கொடிகட்டப்பட்ட தேரையுடையவன் பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானம் என்ற ஊரின் அகன்ற இடம் எல்லாம் செந்நிறம் கொள்ள, சேரன், சோழன், சினம் மிகுந்த திதியன், போரில் வல்ல, யானைகளையுடைய பொன்னணி அணிந்த எழினி, பன்னாடையால் அரிக்கப் பெற்ற கள்ளை யுடைய எருமையூரின் தலைவன், தேன் மணம் கமழும் மார்பிடத்தே பூசி உலர்ந்த சந்தனத்தையுடைய இருங்கோ வேண்மான், நன்கு அமைந்த தேரையுடைய பொருநன் என்று கூறப்படும் எழுவர் அதுவரை பெற்றிருந்த வெற்றிப் புகழ் யாவும் அழியும்படி, ஒரு நாளிலேயே அவர்களின் முரசுகளுடன் வெண்குடைகளைப் பற்றிக் கொண்டான். அதனால் தனது வெற்றிப்புகழ் எங்கும் பரவ, மறக்கள வேள்வி செய்தான். அப்போது அவ் வெற்றிக்குக் காரணமான பாண்டியனின் போர் வீரர் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரத்தை விடப் பெரியது! அங்ஙனமாகவும் நீ, நான் தவறிழைக்கவில்லை'என்று கூறுகின்றனை இங்ஙனம் பொய் கூறாதே, என்று தலைவன்சிடம் தலைவி இயம்பினாள்.

187. நின்னைத் தடுப்பார் யார்?

சேற்று நிலை முனைஇய செங்கட் காரான் ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய, அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று, உறைஇறந்து ஒளிரும் தாழ் இருங் கூந்தல், பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை என்ப, அஃது யாம் கூறேம். வாழியர், எந்தை செறுநர்