பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


ஆம்பல் மென் அடை கிழிய, குவளைக் கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, மெல்கிடு கவுள் அல்குநிலை புகுதரும் தண் துறை ஊரன் திண் தார் அகலம் வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்றாப்பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, ‘இம் மனை அன்று அஃது உம் மனை என்ற என்னும் தன்னும் நோக்கி, மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.

- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் அக 56

“தோழியே கேட்பாயாக! நேற்று இரும்பால் ஆனது போன்று காணப்படும் கரிய கொம்புகளையுடைய எருமை யினம், அவை விடியற்காலத்தில் பளிங்கு மணியைக் கண்டாற் போன்ற தெளிவான நீரையுடைய குளம் கலங்குமாறு அதில் படர்ந்துள்ள ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழிய நீரிலே பாய்ந்தன. அங்கு மலர்ந்துள்ள பல குவளை மலர்களையும் நிரம்பத் தின்றன; பின்பு கரையில் உள்ள காஞ்சி மரங்களின் நுண்ணிய மகரந்தம், ஈரமான தன் முதுகின் மீது சிந்த, அசைவிடும் கன்னத்தை உடையனவாய் வந்து தாம் தங்கும் இடமான கொட்டிலில் தங்கும். அத் தகைய குளிர்ந்த நீர்த் துறைகள் பலவற்றையும் உடைய ஊர்த் தலைவனின் மாலை சூடிய திண்மையான மார்புடன் திருமணக் கோலம் கொண்ட புதிய பரத்தையரைக் கூட்டும் பொருட்டுப் பெரிதும் அவாவுடன் வந்தான் பாணன்.

அந்தப் பாணனைத் தெருவில் நின்ற ஈன்றணிமையை உடைய பசுவானது சினந்து பாய்ந்தது. அப்போது அவன் மனம் கலங்கித் தன் கையில் இருந்த யாழை நிலத்தில் எறிந்து விட்டு அஞ்சி ஓடிவந்து என் இல்லத்துள் புகுந்தான். அதைக் கண்டு எனக்குள் உண்டான மகிழ்ச்சியை எனக்குள் மறைத்துக்