பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


116 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

பழங் கணோட்டமும் நலிய, அழுங்கினன் அல்லனோ, அயர்ந்த தன் மணனே.

- செல்லூர்க் கோசிகன் கண்ணனார் அக 66

“தோழியே, பகைவரும் விரும்பும் குற்றம் இல்லாத அழகையுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர் இவ் உலகத்தில் புகழோடும் விளங்கி மறுமை உலகத்து வாழ்வை யும் குற்றம் இல்லாது பெறுவர் என்று பலரும் கூறிய பழமொழிகள் எல்லாம் உண்மையாவதைக் கண் கூடாக் கண்டோம்.

வரிசைப்பட அணிந்த மலர் மாலையையுடைய நம் தலைவன், நேற்று ஒருத்தியை மணம் செய்து கொள்ள வேண்டி விரும்பிப் புதியதாய் இயன்ற அலங்காரத்தை உடையவராய் இத் தெருவினைக் கடந்து செல்லலானார். அப்போது, மாண்புடைய தொழிலில் சிறந்த அவரது குதிரை யின் மணி ஒலித்தது; அதைக் கேட்டுத் தலைவாயிலைக் கடந்து போய்த் தன்னைக் காணும் விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த மலர்போன்ற கண்களையுடைய தம் புதல்வனைக் கண்டார்.

தம் புதல்வனைக் கண்டு தலைவர் வலவனே, நீண்ட தேரை நிறுத்துவாயாக!’ எனச் சொல்லித் தேரினின்று இறங்கினார். காலம் தாழ்த்தாமல் மகனின் பவளம் போன்ற சிவந்த வாய் தம் மார்பகத்தைப் பொருந்தத் தழுவி, ‘பெரும! இனி வீட்டுக்குச் செல்க என்று விடுத்தார். மகன் அதற்குச் இணங்காது அழுதான். அங்ஙனம் அழுத மகனு டன் இவன் குபேரனும் ஆவான் எனக்கூறி வீட்டுக்குள் வந்தார்.

இச் செயலை நான்தான் செய்தேன் என்று தலைவரும் மற்றவரும் எண்ணுவதற்கு இடமாதலை நினைத்தேன். நாணி னேன். இக் கொடியவன் இந்தப் புதுமணமகன் செயலை இடையூறு செய்து கலக்கிவிட்டான் போலும் என்று கடிந்து கூறி அம் மகனை அடிப்பதற்குக் கோலுடன் அணுகி னேன். அப்போது அவர் மகனைத் தம்பால் அணைத்துக் கொண்டார்.