பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 11

தலைமகள் இல்லறத்துக்கு வேண்டியவற்றையே நினைந்து ஒழுகினாள். நாங்கள் மலர்ந்து விளங்கும் கரும்பும் விளைந்து சிறக்கும் நெல்லும் உடைய கழனியூரனின் மார்பு எல்லார்க் கும் உரிய வயலாய் ஆகாது ஒழிக. என்று விரும்பினோம்” என்றாள் தோழி.

5. எம் இல்லின் முன் தேர் நிற்க ‘வாழி ஆதன், வாழி அவனி பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக! என வேட்டோளே, யாயே, யாமே, ‘முதலைப்போத்து முழு மீன் ஆரும் தண் துறை ஊரன் தேர் எம் முன்கடை நிற்க என வேட்டேமே. - ஐங் 5 “ஆதன் அவினி வாழ்வாராகுக! பசி நாட்டில் இல்லை யாகுக! நோய் நெடுந்தொலைவில் அகலுக! என்று எம் தலைவி இல்லறத்துக்கு உரியவற்றையே நினைந்து வாழ்ந்தாள். நாங்கள் ஆண் முதலை தன்னுடன் வாழும் முதிர்ந்த மீன் களை உண்னும் குளிர்ந்த துறையையுடைய ஊரனது தேர், பிறர் - பரத்தையர் வீட்டின் முன் நிற்றலை விட்டு, எம் வீட்டின் முன்பக்கத்தில் நிற்பதாகுக என்று விரும்பியிருந் தோம்” என்றாள் தோழி.

6. திருமணம் கொள்க

‘வாழி ஆதன், வாழி அவனி வேந்து பகை தணிக ஆண்டு பல நந்துக, என வேட்டோளே, யாயே, யாமே, ‘மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத் தண் துறை ஊரன் வரைக! எந்தையும் கொடுக்க எள வேட்டேமே - άμα 6 “எம் தலைவி நின்னைப் பார்த்த அன்றே நீ மணந்து கொண்டாய் என மனத்துட் கொண்டு, “ஆதன் அவினி வாழ்க, வேந்தன் பகைமை நீங்குக. அவன் பல ஆண்டுகள் வாழ்க” எனத் தனக்குரிய அறநெறிப்படி விரும்பி ஒழுகினாள். அகன்ற நீர் நிலையில் அரும்புகள் பொருந்திய தாமரையை