பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

களையும் செய்து நின்னை மனைவியாகப் பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவள் ஆவாய், எனச் சொல்லி வாழ்த்தி, மங்கல நீருடன் கலந்து சொரியப் பெற்ற, நனைந்த இதழ்களை உடைய பூக்கள் கரிய கூந்தலின் மீது நெற்களுடன் பொருந்தி விளங்க இங்ஙனம் நன்றாகிய திரு மணம் முடிந்து பின்பு, சுற்றத்தார் கல் என்ற ஒலியினராய் விரைந்து வந்து தலைவியை நோக்கி, “நீ பெரிய மனை வாழ்க்கைக்கு உரியவளாக ஆகுக’ என்று வாழ்த்தி, என்னிடம் அவளைக் கூட்டினர்.

ஒர் அறையில் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய இரவில், அவள் நாணத்தால் தன் முதுகை வளைத்துத் தன் புடவைக் குள் ஒடுங்கிக் கிடந்த இடத்தை நான் அடைந்தேன். அவளைத் தழுவும் விருப்புடன் அவள் முகத்தை மூடியிருந்த புடவையைச் சிறிது திறந்தேன். அப்போது அவள் தன் பெண்மையால் அஞ்சிப் பெரு மூச்செறிந்தாள். அப்போது “உன் உள்ளம் எண்ணியதை மறைக்காது சொல்வாய்’ எனப் பின்பு வினவினேன். அதனால் இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில், மானின் மடத்தை உடையதும், செருக்கை உடையதும்ான பார்வையையும், ஒடுங்கிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தை உடையவள் சிவந்த மணிகள் பதித்த ஒளி பொருந்திய குழை காதில் அசைய, உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியினளாகி முகத்தைத் தாழ்த்தி விரைந்து தலை குனிந்தாள். என்று பண்டு நிகழ்ந்ததைத் தலைவன் நினைந்து இன்புற்றான்.

192. தலைவி ஊடலைத் தீர்க்க முடியாது நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து, பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும் கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!