பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


வாய்ந்த நன்கு நீர் பாய்கின்ற ஊரையுடைய தலைவனே, நீ பெரிதும் நாணம் இல்லாதவன் ஆவாய்.

பொரிபோல் புன்கம் பூ மலரும் அகன்ற நீர்த்துறை பொலிவடைய, ஒளி பொருந்திய நெற்றியையும் நறுமண மலர்கள் அணியப் பெற்ற காண்பதற்கு இனிய பலவாய கூந்தலையும், மா வடுவைப் போன்ற கண்ணையும், முத்து மாலை அசையும் அழகிய முலையையும், நுண்ணிய அழகின் நலத்தையுமுடைய ஒரு பரத்தையுடன் நேற்று இடையறாது ஒடும் நீரில் நீ விளையாடினாய் எனப் பலரும் உரைப்பர். இதுநாள்வரை யாங்கள் பொய்யென்று மூடி மறைக்கவும் எம் செயலைக் கடந்து போயிற்று.

மலர்ந்த மலர் மாலையையும் மையால் அழகு செய்யப் பெற்ற யானையையும் மறத்தன்மை மிக்க போர்த் தொழிலை யும் உடைய பாண்டியனின் என்றும் நீங்காத விழர்வை யுடைய மதுரை நகரத்தின் பக்கத்தில் உள்ள போர்க்களத் தில், தம்முள் ஒன்று கூடிச் சேர சோழ மன்னர்களின் கடல் போன்ற பெரிய படைகளைக் கலக்கம் உண்டாகுமர்று தாக்கி, ஒலிக்கும் ஒசையையுடைய முரசு போர்க்களத்தில் கிடக்க, நான்கு திசைகளிலும் பரவி அம் மன்னர்கள் ஓடினர். அவர்களை அவ்வாறு புறங்கண்ட போது உண்டான ஆர வாரத்தை விடப் பெரிதாக அலராயிற்று. என்று தலைவனை வாயில் மறுத்தாள் தோழி.

195. நீ நெஞ்சே மடமை உடையாய் நின்வாய் செத்து நீபல உள்ளி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம் தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு அவ் வாங்க உந்தி, அம் சொல், பாண்மகள், நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்