பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 131

மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் பழம் பல் நெல்லின் வேளுர்வாயில், நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறு வரி இன வண்டு ஊதல கழியும் உயர் பலி பெறுஉம் உரு கெழு தெய்வம் புனை இருங் கதுப்பின் நீடுத்தோள்வயின் அனையேன்.ஆயின், அணங்குக, என்’ என மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின் யார்கொல் - வாழி, தோழி! - நெருநல் தார் புண் களிற்றின் தலைப் புணை தழிஇ, வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, புதுவது வந்து காவிரிக் கோடுதோய் மலிர்நிறை, ஆடியோரே?

- இடையன் நெடுங்கிானார் அக 166 தோழியே, வாழ்க! நல்ல மரங்கள் சூழ்ந்த கள் விற்கும் இல்லம். அதில் உள்ள பலநாளும் வடிக்கப்பெற்ற கள் நிறைந்த சாடியை முகக்கும் கலம் உடைந்திடின் தெரு வெல்லாம் மழைத்துளி போலக் கள்துளி துளிக்கும் ஊர்; பல பழைய நெற்கூடுகளை உடைய வேளுர், அதன் வாயிலில் உள்ள நறுமண நீர் தெளிக்கப்பட்ட மணம் கமழும் கொத்து களால் ஆன பூமாலையைப் புள்ளிகளையும் வரிகளையும் உடைய கூட்டமான வண்டு மொய்க்காமல் அஞ்சி விலகும். இதற்குக் காரணமான உயர்ந்த பலிகளையே பெறும் அச்சம் பொருந்திய தெய்வம்.

மலர் அணிந்த கரிய கூந்தலையுடைய உன்னால் ஐயம் கொள்ளப்பட்டவளுடன் நான் புனலாடி வந்தது உண்மை யாயின் என்னை வருத்தட்டும், என்று இவ்வாறு தன் மனைவியை அவள் கணவன் சூள் உரைத்துத் தெளிய வைத்தான் என்பர். அங்ஙனமாயின் நேற்றுப், புதிதாக வந்த காவிரியின் கரையுச்சியைத் தோய்ந்து வரும் வெள்ளத்தில் மாலையணிந்த யானையைப் போல விளங்கும் புணையின் தலையிடத்தைத் தழுவியிருந்து, கூட்டத்துக்குரிய பெரிய அணியால் பொலிவுற்ற நம்முடன் புனலாடியவர் யாரோ? என்று பரத்தைத் தம் பக்கமுள்ளார் கேட்கக் கூறினாள்.