பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

135


குளிர்ந்த நறுமணம் உடைய சந்தனம் மணக்கும் தோளைத் தழுவி இன்னும் வேறொரு பரத்தையின் இல்லிலே உள்ளான். அவன் அப்படியிருக்கவும், அவனுடைய மனைவி ‘தலைவன் அவளை விட்டமைக்கு நானே காரணம்’ என்று எண்ணி எம்மைப் பழி தூற்றுகின்றாள் என்று கூறுகின்றனர்.

வெற்றியுடைய வேலையும் மழைத்துளி போல் மிக்க அம்பினையும் முகில் போன்ற கரிய கேடகத்தையும் பெற்றவன் பழையன். அவனது காவிரி நாட்டில் உள்ள வைக்கோல் போர்போல் என் கைகளில் செறிந்த என் வளையலை உரிமை யால் உடைக்கவும் இல்லை. எனவே -

காமக் கிழத்தியான யான் மனைக்கிழத்தியான தலை விக்குப் பகை உடையேன் அல்லேன். தன்னைச் சேர்ந்தவரின் அழகிய நெற்றி பசலை உண்டாக அவர்களை நீங்கும் அவளு டைய கணவனே அவளுக்குப் பகையாவதற்குப் பொருத்த மாவர். ஆதலால், தலைவி என்னுடன் புலத்தலுக்குக் காரணம் அவளது அறியாமையே ஆகும் என்று பரத்தை உரைத்தாள். 202. நெருங்காதீர் எம்மை!

நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்பாட்டி ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு தீம் புளிப்பிரம்பின் திரள்கனி பெய்து, விடியல் வைகறை இடுஉம் ஊர! தொடுகலம், குறுக வாரல் - தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போகிய, கடுந் தேர்த் திதியன் அழுந்தைக், கொடுங் குழை அன்னிமிஞலியின் இயலும் நின் நலத் தகுவியை முங்கியே மார்பே. - பரணர் அக 196 நீண்ட கொடிகள் அசையும் கள் மிக்க பாக்கம். அதில் விடியற்காலை வேட்டையில் அகப்பட்ட பெரிய வயிற்றை உடைய வரால் மீனின் துடியினது கண் போன்ற வலிய