பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


wa தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

மறைக்க முடியாமல் மிகவும் அலராக எழுகின்றது! அழகு விளங்கப் பழமையான புகழ் மிக்க பல வகையான மலர்கள் நிறைந்த வயல்களையும் கரும்புகள் மிக்க தோட்டங்களையும் கொண்ட மிக்க சிறப்புடைய கள்ளூர் என்ற ஊர். அதில் -

அறநெறி நில்லாத ஒருவன் அழகிய நெற்றியை யுடைய இளையவள் ஒருத்தியின் நலத்தைக் கவர்ந்து உண்டான். பின் அவளை நான் அறியேன் என்று கொடிய சூளுரைத் தான். அதன் மெய்மையை, அவர்களின் களவு ஒழுக்கத்தை உணர்ந்த சான்றாவாரை வினவி உண்மையை உணர்ந்தனர். அவனை அவையத்தார் தளிர்கள் பொருந்திய மரத்தின் கிளையில் இறுகப் பிணித்துச் சுண்ணாம்பு நீற்றினைத் தலை யில் பெய்தனர். அப்போது அந்தச் சிறப்பு மிக்க அவையில் எழுந்த ஆரவாரத்தைவிட உன்னால் எழுந்த அலர் பெரி தாய் உள்ளது, என்று தோழி தலைவனை வாயில் மறுத்தாள்.

209. சூள் பொய்த்தது அஞ்சுகின்றேன்

கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் அந் தீதிப் பராஅய்ப் புதுப்புனல், நெருநை, மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழிஇ, நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் இளந் துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ நீர்பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து ஆடினை என்ப - மகிழ்ந அதுவே யாழ் இசை மறுகின் நீடுர் கிழவோன் வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்துர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது அவலம் அன்றுமன் எம்க்கே, அயல கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை