பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

நல்லள் அம்ம, குறுமகள் - செல்வர் கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவில் செலீஇயர் வேண்டும் - வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, புனல் மலி புதவின், போஒர் கிழவோன், பழையன் ஒக்கிய வேல் போல், பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே|

- பரணர் அக 326 ஊரலாகிய அழகுடைய தேமலையும், பெரும் போர் செய்யும் குளிர்ந்த கண்களையும், பெருந் தோளையும், சிறிய நெற்றியையும் உடைய நின் இளம் பரத்தை அழகில் சிறந்தவள். எனவே எம் பெருமானே, பழையன் என்பான், வெற்றியுடைய வேலையும் அணிகலன் புணைந்த யானையையும் உடைய சோழ மன்னனின் படைத்தலைவன்; ஒடக்கோலால் ஆழத்தை அளந்தறியாத காவிரிக் கரையினைச் சார்ந்த தோட்டங்களை உடையவன்; நீர் நிறைந்து ஓடும் மதகுகளைப் பெற்றவன்; போர் என்ற ஊர்க்குத் தலைவன். அத் தகையவன் பகைவர் மீது செலுத்திய வேலைப் போல அப் பரத்தையால் பார்க்கப் பெற்றவர் அவள் கண்களால் தைக்கப்பெறுவது தவறாது. - செல்வரின் விரைந்து செல்லும் தேர் குழிந்த தெருக் களில் நீண்ட கொடிகள் அசையும் ‘அட்ட வாயில் என்னு மிடத்தே உள்ள கதிர்களைக் கொண்ட வயலின் அழகை ஒத்த அவளது அழகைப் பாராட்டி, அழகிய நடையால் விளக்கமுற்று அவளுடன் புனல் விழாவில் செல்லுதல் தக்கதேயாகும். ஆதலால் அங்குச் செல்க, என்று தோழி தலைவனின் வாயில் மறுத்தாள்.

216. உடைந்து சிதறுக வளையல்கள்

குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பின்பறழொடு வதிந்த